ஒன்றிய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நீதிமன்ற வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தியும்,ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றவியல் நடைமுறை சட்டம்,இந்திய தண்டனை சட்டம்,இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயற்களை இந்தியி மாற்றம் செயதும்,சட்டங்களை மாற்றி அமைத்து தாக்கல் செய்த மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும்,மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த நிலையில் விவாதமின்றி இந்திய தண்டனைச் சட்டத்தை பாரதிய நியாய சன்ஹிதா என்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தை பாரதிய நாகரிக் சுரக்ஹா ச்ஹிதா என்றும்,இந்திய சாட்சிய சட்டத்தை பாரதிய சாஷியம் என்றும் மாற்றம் செய்ததோடு மட்டுமல்லாமல் ஒன்றிய அரசிற்கு சாதகமாக முழு சட்டத்தையும் மாற்றி அமைத்து கொடுங்கோல் சட்டமாக தாக்கல் செய்ததை கண்டித்து வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்