நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

பழனி நீதிமன்றம் முன்பு மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பழனி நீதிமன்றம் முன்பு மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக, புதிய குற்றவியல் சட்டங்களை பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது. அந்த மூன்று சட்டங்களும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றிற்கு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அபினியம் என சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளன.

முக்கிய சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டியிருப்பது அரசியல் சட்டத்தின் 348வது பிரிவை அப்பட்டமாக மீறும் செயல். பார்லிமென்டில் அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டப்படி கட்டாயம். எனவே சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மூன்று சட்டங்களின் பெயர் மாற்றப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர் முதல் மூன்று நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story