தர்மபுரியில் இரண்டாவது நாளாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் புதிய குற்றவியல் சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தர்மபுரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பரட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சிவம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு 3 குற்றவியல் சட்டங்களை முமையாக மாற்றியமைத்து அமல்படுத்தியதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் தர்மன், பொருளாளர் சதாசிவம், துணை தலைவர் முனிராஜ், இணை செயல ளர் குமரன், மூத்த வழக்கறிஞர்கள் ஹரிகிருஷ்ணன், பிரகாசம், சந்திரசேகர், ராஜ ங்கம், ராசாமி, ராஜ்குமார், கோவிந்தராஜ், ம தேஸ், நூலகர் வெங்கடேஸ், முனியப்பன், பழனிசாமி, குமரேசன், ரத்னம், ரங்கநாதன், கோபாலகிருஷ்ணன், பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.