நீதிமன்ற வளாகம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற வளாகம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

போராட்டம் 

திருப்பூரில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு நேற்று நள்ளிரவு முதல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இதற்கு பல்வேறு அரசியல் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக திருப்பூர் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story