வழக்கறிஞர்கள் வாகனங்களுக்கு க்யூஆர் கோடு ஸ்டிக்கர்கள்

வழக்கறிஞர்கள் வாகனங்களுக்கு க்யூஆர் கோடு ஸ்டிக்கர்கள்

ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்ச்சி

வழக்கறிஞர் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்ச்சி
கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு க்யூஆர் அடங்கிய ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்ச்சி. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதிபதி சசிரேகா, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் வழக்கறிஞர்களின் சுய விவரங்கள் தெரியவரும். இது குறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில் கடைகளில் விற்கக்கூடிய வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாங்கி கொண்டு வழக்கறிஞர்களாக இல்லாதவர்களும் நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்தி விடுவதாகவும் இதனால் வழக்கறிஞர்கள் அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு கடும் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர். இதனை தடுப்பதற்கு காவல்துறையிடம் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் இணைந்து இது போன்ற ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் வழக்கறிஞர்களாக இல்லாதவர்கள் அவர்களின் வாகனங்களை நீதிமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது நீதிமன்றத்தை சுற்றியோ வழக்கறிஞர்கள் என்று கூறிக்கொண்டு நிறுத்தி விட முடியாது என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story