வழக்கறிஞர்கள் போராட்டம் : 2 - வது நாளாக நீதிமன்றம் புறக்கணிப்பு
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு, புதுவை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக கடந்த 1ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக மீண்டும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, குழித்துறை, பத்மநாபபுரம், இரணியல் ஆகிய இடங்களில் நீதிமன்றங்கள் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இரணியல் நீதிமன்றம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இரணியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் வெஸ்லி தலைமை வகித்தார். குழித்துறை நீதிமன்றம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
Next Story