3வது நாளாக வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

3வது நாளாக வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

நீதிமன்றம் 

மத்திய அரசு அமல்படுத்த உள்ள குற்றவியல் சட்டத்திருத்ததை திரும்ப பெறக்கோரி பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் 3வது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் (பார்அசோசி யேசன்) சார்பில் மத்திய அரசு - சட்டம் மற்றும் நீதித்துறையில் முப்பெரும் சட்டங்களில் கொண்டு வந்துள்ள திருத்தங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், குன்னம், வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பணிகள் பாதிக்கப்பட்டன. 3-வது நாளாக இன்றும் (புதன்கி ழமை) வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வள்ளுவன் நம்பி தெரிவித்தார்

Tags

Next Story