விழுப்புரம் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம்

விழுப்புரம் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் 

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார்.அட்வகேட் அசோசியேஷன் தலைவர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் அலாவுதீன், பார்த்தீபன், பிரகாஜ், பிராங்க் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், குற்றவியல் சட்ட மாற்றங்களை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story