நகர திமுக சார்பில் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கல்

சங்ககிரியில் நகர திமுக சார்பில் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரி நகர திமுக சார்பில் திமுக அரசின் பல்வேறு சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் .தங்கமுத்து தலைமையில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், 2024ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் வழங்கி தொடங்கி வைத்து சிறப்பித்தார் அப்போது மாவட்ட துணைசெயலாளர் .சுந்தரம், நகர செயலாளர் கே.எம்.முருகன் நகரபொருளாளர் செல்வராஜ், பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்.வி.அருண்பிரபு, பேரூராட்சி 1வது வார்டு செயலாளர் அன்வர்பாஷா, உதயநிதி ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story