குடியிருப்புகள் அருகே சாய்ந்த நிலையில் மின் கம்பம் -சரிசெய்ய கோரிக்கை

X
சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம்
கருங்கல்பட்டி அண்ணாநகரில், குடியிருப்புகள் அருகே, சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பங்களை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியம், கருங்கல்பட்டி அக்ரஹாரம் பஞ்சாயத்திற்குட்பட்ட, அண்ணாநகரில், கடந்த பலவருடங்களுக்கு முன்னர், குடியிருப்புகள் அருகே ஆறு மின்கம்பங்கள் அமைக்கபட்டது. தற்சமயம், நாளுக்குநாள் ஏற்பட்ட மழை, வெப்பம் போன்ற இயற்கை காரணங்களால், இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து காணப்படுகின்றது. இதனால், அதிக காற்றடிக்கும்போது கம்பம் சாய்ந்துவிழ வாய்ப்புள்ளது. அவ்வாறு விழுந்தால், பலத்த பொருள்சேதாரம் ஏற்படுவதுடன், உயிர்சேதாரம்கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இதுசம்மந்தமாக, மின்வாரிய அதிகாரிகள் நேரில்பார்வையிட்டு, சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
Next Story
