குறைந்தது மழை - குமரி அணைகளில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்

குறைந்தது  மழை  -  குமரி அணைகளில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்
X
திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து அணைகளில் இருந்து மதகுகள் வழியாகவும், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் கோதையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் சென்றது. திற்பரப்பு அருவியிலும் அதிக அளவு தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்தது. இதனால் நேற்று பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டது. சிற்றாறு, பேச்சிப்பாறை அணைகளில் இருந்தும் உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டது. உபரி நீர் திறக்கப்படாததால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து சீரான அளவில் தண்ணீர் செல்கிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் மிதமாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்கு பிறகு அங்கு குளிக்க அனுமதி வழங்க்ப்பட்ட நிலையில், பேரூராட்சி சார்பில் சுகாதார பணிகளும் செய்யப்பட்டன.

Tags

Next Story