பண்ணைகுட்டையில் தோல் கழிவுநீர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாவட்ட நிர்வாகம் சார்பில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வெட்டப்பட்ட பண்ணை குட்டைகளில் தோல் கழிவுநீரினை தேக்கி வைத்துள்ள தனியார் தோல் தொழிற்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மாவட்டம் முழுவதும் மழை நீரை சேமித்து வைக்க 100 நாள் பணியாளர்களை கொண்டு சுமார் 1600 பண்ணை குட்டைகளை வெட்டியுள்ள நிலையில், ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தோல் மற்றும் காலணி தொழிற்சாலை நிர்வாகம், தங்கள் தோல் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தோல் கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் தொழிற்சாலை அருகில்

செல்லும் கானாறு வழியாக வெளியேற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெட்டப்பட்ட பண்ணை குட்டைகளில் தோல் கழிவுகளை தேக்கிவைத்துள்ளனர்.. இதனால் பெரியவரிகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கக்பட்டு நோய் தொற்று பரவும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் தோல் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தோல் கழிவுகளை நிலத்தில் தேக்கி வைக்கத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது அதிகாரிகளின் உத்தரவை அலட்சியபடுத்தும் விதமாக சில தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுகளை நிலத்தில் தேக்கி வைப்பதும், மழை காலங்களில் பாலாற்றில் திறந்து விடுவதும் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்..

Tags

Next Story