சேலம் சென்டிரல் சட்டக்கல்லூரியில் பேச்சு அரங்கம்

சேலம் சென்டிரல் சட்டக்கல்லூரியில் பேச்சு அரங்கம்

சேலம் சென்டிரல் சட்டக்கல்லூரியில் நடந்த பேச்சு அரங்கத்தில் சமூக நீதியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் பீட்டர் அல்போன்ஸ் பேசினார்.


சேலம் சென்டிரல் சட்டக்கல்லூரியில் நடந்த பேச்சு அரங்கத்தில் சமூக நீதியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் பீட்டர் அல்போன்ஸ் பேசினார்.

சேலம் சென்டிரல் சட்டக்கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான "சமூக நீதி தேவையும் அதன் பரிமாணங்களும்" என்ற தலைப்பில் பேச்சு அரங்கம் கல்லூரி விழா அரங்கத்தில் நடந்தது. கல்லூரி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டா் அல்போன்ஸ் கலந்து கொண்டு பேசியதாவது:- சங்க காலத்தில் பெண்கள் உடன் கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. தற்போது கல்வியால் பெண்கள் இந்த சமுதாயத்தில் சமூகநீதி பெற்று இருக்கிறார்கள். பெண் கல்வி என்பது மிகவும் முக்கியமானது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டசபையில் விதவை மறுமணம், குழந்தை திருமணம் போன்ற சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடியவர்.

அவரை போன்ற சிந்தனைகள் இன்றைய தலைமுறையினருக்கு வேண்டும். வட இந்தியர்களோடு ஒப்பிடும்போது நமது நாட்டில் நாம் சமூக முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பதை நினைத்து பெருமிதம் கொள்ளவேண்டும். இந்த சமூக நீதி பயணம் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்லவேண்டும். சமூக நீதி இல்லாத நாடு. ஜனநாயக நாடாக இருக்காது.

இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் பேசினார். நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழும், பரிசு பெற்றவர்களுக்கு கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

Tags

Next Story