ரூ.12 கோடி மதிப்பில் சாலையின் இருபுறமும் எல்.இ.டி., விளக்குகள்

ரூ.12 கோடி மதிப்பில் சாலையின் இருபுறமும் எல்.இ.டி., விளக்குகள்

ல்.இ.டி., விளக்குகள்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மின் சிக்கன நடவடிக்கையாக ரூ.12 கோடி மதிப்பில் குழல் விளக்குகளுக்கு மாற்றாக 20 வாட்ஸ் கொண்ட எல்.இ.டி., விளக்குகள் மாற்றப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 40 வாட்ஸ் கொண்ட 12,000 குழல் விளக்குகள் பயன்பாட்டில் இருந்தன. இவற்றை, 12 கோடி ரூபாய் மதிப்பில், மின் சிக்கனம் காரணமாக, 20 வாட்ஸ் கொண்ட எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதில், பிள்ளையார்பாளையம் பகுதியில், 12வது வார்டில், சேர்மன் சாமிநாதன் சாலைலும், எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், போதிய வெளிச்சம் கிடைக்காததால், இருபுறமும் எல்.இ.டி., விளக்குகள் அமைக்க கவுன்சிலர் தேவராஜிடம் அப்பகுதியினர் கேட்டுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்தின் கோரிக்கையின் படி, சாலையின் இருபுறமும் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன."

Tags

Next Story