சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம் 

பண்ருட்டி, கடலூர் முதுநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் சாதி வேற்றுமையை கலைந்து ஒற்றுமையை வளர்ப்பதற்காகவும், வன்கொடுமையால் ஏற்படும் சட்டரீதியான பிரச்சனைகள் குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
காவல்துறை தலைவர், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் அறிவுறுத்தலின்படியும், கடலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படியும், கடலூர் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, காவல் துணை கண்காணிப்பாளர் P. நாகராஜன், காவல் ஆய்வாளர் P. தீபா, புள்ளியல் ஆய்வாளர் S. ரவிசங்கர், காவல் உதவி ஆய்வாளர் K. பாலசந்தர் மற்றும் காவல் ஆளிநர்கள் சகிதம் பண்ருட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாளிகைமேடு, தட்டாம்பாளையம் மற்றும் கடலூர் முதுநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிப்காட் ஆகிய கிராமங்களில் சாதி வேற்றுமையை கலைந்து ஒற்றுமையை வளர்ப்பதற்காகவும், வன்கொடுமையால் ஏற்படும் சட்டரீதியான பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மேலும், கல்வி மேன்மை மற்றும் விழிப்புணர்வு பற்றியும் அரசாங்க நலத்திட்ட உதவிகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

Tags

Next Story