சட்ட விழிப்புணர்வு முகாம்

திருவாடானை அருகே நாட்டு நலப்பணிகள் திட்டம் - வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி நாட்டு நலப்பணிகள் திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று திருவாடானை அருகே உள்ள T. கிளியூர் கிராமத்தில் மாணவ மாணவிகளிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியும் ஆன பிரசாத் தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மனிஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்புரையாக கல்லூரி கணித பேராசிரியர் செல்வம் உரையாற்றினார். விழாவில் பேசிய நீதிபதிகள் மக்கள் நீதிமன்றங்களை தேடிச் சென்ற காலம் போய் நீதிமன்றங்களே மக்களை தேடி வருகிறது.

இதை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு தங்களது கிராமங்களில் உள்ள பிரச்சனைகளை மனுக்கள் மூலம் நீதிமன்றத்தில் இயங்கி வரும் வட்டச் சட்ட பணிகள் குழுவிலும் வழங்கும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தரப்படும். மேலும் தேவைப்பட்டால் இலவசமாக வழக்கறிஞர் வைத்து வழக்கு தாக்கல் செய்வும், வழக்கு முடியும் வரை அதை வட்ட சட்ட பணிகள் குழு இலவசமாக செய்த தருவதாகவும் தெரிவித்தனர். மேலும் மாணவ மாணவிகளிடையே கிராமங்களில் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்தனர். அப்போது மாணவிகள் குயவன்குண்டு கிராமத்தில் சாலை வசதி இல்லை, திருச்சி ராமேஸ்வரம் சாலை செங்கமடை கிராம பேருந்து நிறுத்ததில் பேருந்துகள் நின்று செல்வதில்லை, பாதையை ஆக்கிரமித்து வைத்திருப்பதாக ஓடக்கால் மாணவி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் புகார் சம்பந்தமான விவரங்களை மனுவாக எழுதிக் கொடுங்கள் அதன் மீது நடவடிக்கை எடுத்து தரப்படும் எனவும் தெரிவித்தனர். இந்த முகாமில் நாட்டு நல பணி திட்ட அலுவலர் மணிமேகலை கௌரவ விரிவுரையாளர்கள் ரமேஷ், சரவணன் உள்ளிட்டவர் கலந்து கொண்டார்கள். கௌர விரிவுரையாளர் அமரஜோதி நன்றி கூறினார்

Tags

Next Story