ஜெயங்கொண்டம் கிளை சிறைச்சாலையில் சட்ட விழிப்புணர்வு முகாம்

ஜெயங்கொண்டம் கிளை சிறைச்சாலையில் சட்ட விழிப்புணர்வு முகாம்

 விழிப்புணர்வு முகாம்

ஜெயங்கொண்டத்தில் உள்ள கிளை சிறைச்சாலையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இராஜசேகரன் தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அரியலூர் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பெயரில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் முதன்மை மாவட்ட தலைமை நீதிபதியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான கிருஸ்டோபர் சீரிய வழிகாட்டுதலிலும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் முனைவர் லதா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டத்தில் உள்ள கிளை சிறைச்சாலையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இராஜசேகரன் தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் உரையாற்றுகையில் குற்றவாளிகள் சந்தர்ப்பம் சூழல் காரணமாக குற்றம் செய்கிறார்களே தவிர வேண்டும் என்று செய்வது கிடையாது என்றும் சிறை சாலை என்பது குற்றவாளிகளை திருத்தும் இடமே தவிர தண்டிக்கும் இடம் அல்ல என்றும் கூறினார். வரும் 27 ஆம் தேதி அன்று நடக்க உள்ள மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட காலம் சிறைச்சாலையில் இருக்கும் நபர் மனம் திறந்து வாழ ஒரு வாய்ப்பாக அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பொழுது சிறைச்சாலையில் உள்ளிருந்த காலத்தையே தண்டனை காலமாக கருதி விடுவிக்க படுவார் என்றும் கூறினார். முகாமில் பட்டியல் வழக்கறிஞர் காந்திமதி கலந்து கொண்டு சிறை வாசிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். இம்முகாமை வட்ட சட்டப்பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் மற்றும் சிறை சாலை கண்காணிப்பாளர் பொன்பகவத்சிங் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

Tags

Next Story