பள்ளி மாணவர்களுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு முகாம்!
திருப்பூர் கருப்பக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பேரில் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் குணசேகரன் வழிகாட்டுதலின் பேரில் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட முதன்மை சார்பு நீதிபதி மற்றும் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் ராமச்சந்திரன் போதைப்பொருள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மோட்டார் வாகன சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
தொடர்ந்து சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழக்கறிஞர் முத்துலட்சுமி போக்சோ சட்டம் குறித்தும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் நந்தகோபாலன் , பள்ளியின் ஆசிரியர் சுஜாதா வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சட்ட விழிப்புணர் முகாமில் 300-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவியர்கள் கலந்து கொண்டனர்