பெரம்பலூரில் திருநங்கைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருநங்கைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருநங்கைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது . தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய பல்கீஸ் ஆலோசனையின் படியும் ஏப்ரல் 15 ஆம் தேதி பகல் ஒரு மணி அளவில் நீதிமன்ற வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

சட்ட விழிப்புணர்வு முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய சந்திரசேகர் பேசிய போது திருநங்கைகளுக்கும் ஆண்கள், பெண்கள் இணையாக சமவேலை வாய்ப்பு, சமஉரிமைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும், ஒரு சில இடங்களில் காவலர்களாகவும், ஓட்டுனர்களாகவும் பணிபுரிந்து வருகின்றார்கள் என்றும் கூறினார்.

மேலும் திருநங்கைகளுக்கான சட்ட உதவி தொடர்பாக எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சட்ட உதவி மையத்தை நாடலாம் என்றும் தங்களுக்கு மனு எழுத தெரிந்தால் தாங்களே மனு எழுதி வரலாம் அல்லது சட்ட உதவி மையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள சட்ட தன்ஆர்வலர்களால் உரிய முறையில் மனு எழுதப்பெற்று சட்ட உதவி மையம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வலியுறுத்தினார்.

மேலும் இச்சட்ட விழிப்புணர்வு முகாமில் ஓய்வு பெற்ற தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் த கண்ணையன் கலந்துகொண்டு திருநங்கைகளுக்கான விழிப்புணர்வுகள் குறித்தும் சிறப்பாக பேசினார்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பேரா முருகையன், சிராஜுதீன், கவியரசு ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் முகாமில் பெரம்பலூர் மாவட்ட திருநங்கைகளின் தலைவி ராணி மற்றும் மனுஷா உட்பட 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story