அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
X
விழிப்புணர்வு முகாம் 
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய பல்கிஷ் வழிகாட்டுதழின்படியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் சந்திர சேகர் ஆலோசனை படியம், பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களுக்கு பல்வேறு இடங்களில் சட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது .

இந்நிலையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்பணர்வ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூத்த வழக்கறிஞர் சிராஜ்தீன் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்பணர்வு குறித்து பேசும்போது ஒவ்வொரு அமைப்பு சாரா தொழியாளர்களும் உறுப்பினர் அட்டை அவசியம் பெற்றிருக்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு வகையான அரசு உதவிகள் பெறலாம். உறுப்பினர் அட்டை இல்லாதவர்கள் உரிய அலுவலகம் மூலம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார் அல்லது சட்டப்பணிகள் ஆணைக்குழுவினையும் நாடலாம். அமைப்பு சாரா தொழிலாளர்கள் விபத்தில் காயம் ஏற்பட்டலோ அல்லது வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் நஷ்டஈடு கோரி தொழிலாளர்கள் நல ஆணையத்தை அணுகலாம் என்று தெரிவித்தார். தொடர்ந்து வழக்கறிஞர் தினேஷ் அமைப்புசார தொழிலாளர்களுக்கான அரசு அளிக்கும் அனைத்து உதவிகளையும் விரிவாக எடுத்துரைத்தார்,

திருஞானம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் யார் யார் என்றும், அதில் உள்ள ஒவ்வொரு பிரிவுகளையும் கூறி திருமண உதவி, கல்வி உதவி, விபத்து உதவி மற்றும் ஏனைய உதவிகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்கள். முன்னதாக மாவட்ட இணைசெயலாளர் வைரமணி அனைவரையும் வரைவேற்று பேசினார். தமிழக கட்டிட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில அமைப்பு செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் கதிரவன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மேலும் 50 க்கு மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story