சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு

சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு

ஆய்வில் ஈடுபட்ட குழுவினர் 

சீர்காழி வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகார் சுற்றுலா தளம் புதுப்பிக்கும் பணிகள் ரூ.23 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருவதை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து,வானகிரி மீன் இறங்குதளத்தை பார்வையிட்டு, மீனவர்களிடம் கலந்துரையாடினார்கள்.

திருமுல்லைவாசல் கிராமத்தில் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் குறுக்கே ரூ.8 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருவதையும், சீர்காழி அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை மையம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும், மயிலாடுதுறை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 5 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தனர்.

இவ்வாய்வின்போது தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு திருத்தணி எம்எல்ஏ சந்திரன், மயிலம் எம்எல்ஏ சிவக்குமார்,ஆரணி எம்எல்ஏ சேவூர்.எஸ்.ராமசந்திரன், எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், வேதாரண்யம் எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வின் போது உடைந்தனர்.

Tags

Next Story