திருப்பத்தூரில் சட்டமன்ற பேரவை மதிப்பீடு குழு ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற பேரவை மதிப்பீடு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் சட்டமன்ற பேரவை மதிப்பீடு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருப்பத்தூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க முதலமைச்சரிடம் பரிந்துரைக்கப்படும்! அதிகாரிகளுக்கு எதுவும் சொல்ல தெரியல! புள்ளி விவரங்கள் கூட சரியாக கொடுக்க தெரியவில்லை! தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு கூட்டத்தில் தலைவர் அன்பழகன் பேட்டி
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் தமிழ் நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினரான அன்பழகன், சேவூர் ராமசந்திரன், பரந்தாமன், ஓஎஸ் மணியன் ஆகியோர் ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மற்றும் உண்டு உறைவிட பள்ளி, பழங்குடியினருக்கான புதியதாக கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணிகள், வாணியம்பாடி கட்டப்பட்டு வரும் நீதிபதி குடியிருப்பு கட்டிடம், அங்கன்வாடி மையம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக 7-ஆம் தளத்தில் அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் திருப்பத்தூரில் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை எடுத்துச் சொல்லி விரைவாக அதற்கான ஏற்பாட்டை இந்த குழு தமிழக முதல்வரிடம் பரிந்துரைக்கும் மேலும் 500க்கும் மேற்பட்ட பாம்பு கடிகள் வருகிறது எனவே மருத்துவர்கள் பாம்பு கடி மேலாண்மை குழு அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளனர் விரைவாக ஏற்படுத்த பரிந்துரைக்கப்படும்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்ட பணிகள் தயாரிக்கப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. மேலும் சில அதிகாரிகளுக்கு எதுவும் சொல்லவும் தெரியவில்லை குழு வருகின்றது என்று தெரிந்தும் சரியாக புள்ளி விபரங்கள் கொடுக்க தெரியவில்லை என்று கடிந்து இருக்கிறேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.