பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு - பெ.ராமலிங்கம் எம்.எல்.ஏ பங்கேற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவின் ஆய்வு அதன் தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் இக்குழுவின் உறுப்பினரான நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் கலந்து கொண்டார். இக்குழு கோனேரிப்பாளையம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை, வேப்பந்தட்டை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு கலைக் கல்லூரி மாணவர் விடுதி, எறையூர் சர்க்கரை ஆலையில் முடிவுற்ற பணிகள், எறையூர் கோத்தாரி காலணி பூங்கா(சிப்காட்), பெரம்பலூர் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலக கட்டிடம் கட்டுதல், பெரம்பலூர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி கட்டுதல், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கூட்ட அரங்கில் சட்டமன்ற உறுதிமொழிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி(ஸ்ரீரங்கம்), அருள்( சேலம் மேற்கு), அண்ணாதுரை (மயிலாடுதுறை), பிரபாகரன்(பெரம்பலூர்), மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் குன்னம் ராஜேந்திரன் உறுதிமொழிக் குழு செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் கருணாநிதி, துணைச் செயலாளர் ரவி, சிறைத்துறை டிஐஜி ரம்யா பாரதி, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதியழகன், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட திட்ட இயக்குனர் லலிதா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், சட்டபேரவை உறுதிமொழி குழு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story