அரசு கல்லூரியில் "சட்டமன்ற நாயகர் - கலைஞர்" விழாக் குழு கருத்தரங்கம்
அரசு கல்லூரியில் "சட்டமன்ற நாயகர் - கலைஞர்" விழாக் குழு கருத்தரங்கம். கரூர் மாவட்டம், குளித்தலை, டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள விழா மேடையில், இன்று முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்வில் "சட்டமன்ற நாயகர் - கலைஞர்" விழாக்குழு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லுரி முதல்வர் ரவிச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சட்டமன்றப் பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் சீனிவாசன் முன்னுரை வழங்கினார். திருச்சி மண்டலக் கல்லுரிக்கல்வி இணை இயக்குநர் முனைவர் குணசேகரன், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், கிருஸ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையுரையாற்றினார். இந்நிகழ்வில் அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில், பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் ரவி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா உள்ளிட்ட கல்லுரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில் சட்டமன்றப்பேரவை துணை செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.