எலுமிச்சை விலை உயா்வு !
எலுமிச்சை
ஆலங்குளத்தில் எலுமிச்சை விலை இன்று கிலோ ரூ.150 ஆக உயா்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் எலுமிச்சை சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது.
இங்கு விளைவிக்கப்படும் எலுமிச்சையானது, வெளிமாவட்டங்களுக்கும், கேரளத்திற்கும் எலுமிச்சை கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உயா்ந்துl வரும் நிலையில், குளிா்பானங்கள் தயாரிப்புக்காக எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளது.
ஆலங்குளத்தில் கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.100 வரை விற்பனையான எலுமிச்சம்பழம் வியாழக்கிழமை ரூ. 150 முதல் ரூ. 170 ஆக உயா்ந்தது.
கடுமையான வெயிலின் காரணமாக எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளதாகவும், எலுமிச்சை கொள்முதலில் உள்ளூா் மற்றும் கேரள வியாபாரிகளிடையே கடுமையான போட்டி நிலவுவதால் விலை அதிகரித்துள்ளதாகவும், வரும் வாரங்களிலும் மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என்றும் மொத்த வியாபாரிகள் கூறுகின்றனா்.
Next Story