லியோ திரைப்படம் - தியேட்டரில் குவிந்த ரசிகர்கள்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள லியோ திரைப்படத்தை காண ராசிபுரம் திரையரங்கில் அதிக அளவில் ரசிகர்கள் ,பொதுமக்கள் குவிந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் விஜய் நடித்து வெளிவந்த லியோ திரைப்படம் ராசிபுரம் டி என் சி மற்றும் தேவி திரையரங்கில் நேற்று வெளியானது. இந்நிலையில் தொடர்ந்து 5 காட்சிகளாக லியோ திரைப்படம் வெளியிடப்பட்டு ஓடி வருகிறது. தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து லியோ திரைப்படத்திற்கு அதிக அளவில் கூட்டம் செல்வதால் நேற்று இரவு முழுவதுமே தியேட்டர் முன்பு அதிக அளவில் கூட்டம் வந்து திரைப்படத்தை காண முந்தி அடித்துச் சென்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. திரையரங்கு பணியாளர்கள் அவர்களை வரிசைப்படுத்தி அனுப்பி வைத்தனர்..


Tags

Next Story