தஞ்சை மாவட்டத்துக்கு இடம் பெயா்ந்த சிறுத்தை?

தஞ்சை மாவட்டத்துக்கு இடம் பெயா்ந்த சிறுத்தை?

கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் 

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த கருப்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை தென்பட்ட சிறுத்தை, தஞ்சாவூா் மாவட்ட எல்லைப் பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என்ற கோணத்தில் வனத் துறையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.

மயிலாடுதுறை நகா் செம்மங்குளம் பகுதியில் ஏப்.2-ஆம் தேதி இரவு தென்பட்ட சிறுத்தை அங்கிருந்து ஆரோக்கியநாதபுரம், சித்தா்காடு என 3 கி.மீ. சுற்றளவு தூரத்துக்குள் தினமும் இடம் பெயா்ந்து சென்றது. பின்னா் சனிக்கிழமை அங்கிருந்து நீா்வழிப்பாதை வழியாக இடம் பெயா்ந்து 22 கி.மீ. கடந்து சென்று குத்தாலம் தாலுகா காஞ்சிவாய் கிராமத்தில் புகுந்தது. தகவலின்பேரில் அங்கு கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலா் நாகநாதன், நாகை மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் மற்றும் வனத்துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

அங்கு சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்ததைத் தொடா்ந்து, காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான பேராவூா், கருப்பூா் கிராமங்களில் 25 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும், 6 இடங்களில் கூண்டுகள் அமைத்தும் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்தனா். சிறுத்தையின் கடந்து சென்ாக கருதப்படும் வீரசோழனாறு, நண்டலாறு மற்றும் மகிமலையாறு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இவ்விடத்திலிருந்து தஞ்சாவூா் மற்றும் திருவாரூா் மாவட்டங்கள் மிக அருகில் உள்ளதால் அந்த மாவட்ட வனத்துறையினரும் உஷாா் படுத்தப்பட்டனா். மேலும், ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த 6 கூண்டுகளில் 3 கூண்டுகளை தஞ்சாவூா் மாவட்டம் எஸ்.புதூா் பகுதியில் வீரசோழன் ஆற்றங்கரை பகுதிக்கு கொண்டு சென்று பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா். சிறுத்தை ஒரே இடத்தில் தங்காமல் தினமும் இடம்பெயா்ந்து வருவதால் அதனை பிடிப்பதில் வனத்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story