உதகை அருகே சிறுத்தை நடமாட்டம்; மக்கள் அச்சம்

உதகை அருகே சிறுத்தை நடமாட்டம்; மக்கள் அச்சம்

 உதகை அருகே தாகம் தணிப்பதற்காக குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

உதகை அருகே தாகம் தணிப்பதற்காக குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை, காட்டெருமை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் உதகை அருகே பிங்கர் போஸ்ட் என்னும் பகுதியில் சர்வ சாதாரணமாக சிறுத்தை இறைத்தேடி குடியிருப்பு பகுதிக்குள் வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story