கோழியை வேட்டையாடிய சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்!

கோவை கணுவாய் அருகே நடமாடும் சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ளது.யானைகள்,சிறுத்தை,கரடிகள்,மான்கள்,காட்டு மாடுகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் வருவது தொடர்கதை ஆகிவிட்டது.கடந்த சில மாதங்களாக கோவை திருவள்ளுவர் நகர் அருகே உள்ள கணுவாய் மலைப் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்

.இந்த நிலையில் கோவை கணுவாய் அருகே உள்ள பழனியப்பா லேஅவுட் பகுதியில் வசித்து வரும் சக்திவேல் என்பவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார்.நேற்று இரவு கோழிகள் தொடர்ந்து சத்தமிட்டதால் சந்தேகம் அடைந்த சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது ஒரு கோழி மாயமாகி இருப்பது தெரியவந்ததை அடுத்து வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்து கோழியை வேட்டையாடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தவர்கள் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.கடந்த சில தினங்களுக்கு முன் சிறுத்தை ஆட்டுக்குட்டியை வேட்ட்டையாடி அதன் உடலை மரத்தின் மேல் விட்டு சென்ற நிலையில் தற்போது வீட்டில் புகுந்து கோழியை வேட்டையாடி சென்றதை அறிந்த அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story