நாமக்கல் அரசு கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையின் சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இராஜா தலைமை வகித்து, தொழுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாணவ மாணவியர்களுக்கு விநியோகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மோகனூர் வட்டார மருத்துவமல்லாத மேற்பார்வையாளர் வேல்முருகன் கலந்து கொண்டு தொழுநோய் பற்றியும் சந்தேகத்திற்கு உண்டான அறிகுறிகள் பற்றியும் எடுத்து கூறி அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் நகர் நல மையங்களில் சிகிச்சை எடுத்து குணமாக்கி விடலாம் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியினை விலங்கியல் துறை மாணவ மாணவியர்கள் எடுத்துக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் விலங்கியல் துறை தலைவர் இராஜசேகர பாண்டியன் மற்றும் தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வெஸ்லி செய்திருந்தார்.