கள்ளக்குறிச்சியில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சியில் பொதுமக்களிடையே தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மருத்துவமல்லா மேற்பார்வையாளர் கொளஞ்சியப்பன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில், தொழுநோயின் அறிகுறிகளான வெளிர்ந்த, சிவந்த உணர்ச்சியற்ற தேமல், நரம்புகள் தடித்திருத்தல், கை, கால்களில் உணர்ச்சியின்மை, காதுமடல் தடித்திருத்தல் குறித்து விளக்கினர். மேலும் தொழுநோயின் சிகிச்சைகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags
Next Story