தொழுநோய் விழிப்புணர்வு பேரணி 

தொழுநோய் விழிப்புணர்வு பேரணி 
பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு ஜனவரி 30 ஆம் நாள் வருடந்தோறும் தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி (30.01.2024) கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள், மாவட்ட, வட்ட மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தொழுநோய் ஒழிப்பு தினம், தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றல், தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்சிகள் நடந்தது.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தொழு நோய் ஒழிப்பு விழிப்புணர்பு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் யினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பிரின்ஸ் பயஸ், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.பிரகலாதன், பொது சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.சு.மீனாட்சி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் கனகராஜ், அரசு அலுவலர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story