பனமுகை கிராமத்தில் தொழுநோய் கண்டறியும் முகாம்

பனமுகை கிராமத்தில் தொழுநோய் கண்டறியும் முகாம்

தொழு நோய் கண்டறியும் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பனமுகை கிராமத்தில் தொழுநோய் கண்டறியும் முகாமில் 896 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக பனமுகை கிராமத்தில் தொழு நோய் பற்றி வீடு வீடாக சென்று பரிசோதனை குறித்து மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் வேலரசு தலைமையில் சுகாதார ஆய்வாளர் கே.சம்பத் முன்னிலையில் ஒவ்வொருவீடாக சென்று வீட்டில் உள்ள அனைவருக்கும் நேரடியாக உடலில் தோலில் ஏற்படும். உணர்ச்சியற்ற படை அல்லது தேம்பல் இருக்கிறதா என 896 நபர்களுக்கு பரிசோதனை செய்தனர். இந்நிகழ்வில் சுகாதார பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story