மதுரை விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்- சுற்றுலா வாகன ஓட்டுனர்கள்

மதுரை விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்- சுற்றுலா வாகன ஓட்டுனர்கள்

செய்தியாளர் சந்திப்பு 

மதுரை விமான நிலைய புதிய வாகன கட்டணத்தை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் 1000 ஓட்டுனர்கள் சேர்ந்து விமான நிலையத்தை முற்றுகையிடுவோம் என மதுரை மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூல் செய்யும் நிறுவனத்தின் பழைய ஒப்பந்தம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் புதிதாக ஆஞ்சநேயா என்கிற ஏஜென்சி மூலம் விமான நிலைய நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில் புதிதாக மாற்றப்பட்டுள்ள கட்டணத்தில் சொந்த வாகனங்களில் வருபவர்களுக்கு 30 ரூபாய் எனவும் அதுவே வாடகை வாகனங்களுக்கு 135 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது .

ஏற்கனவே சர்ச்சையை கிளப்பிய நிலையில். நேற்று மதுரை மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 50-க்கும் மேற்பட்ட வாடகை வாகன ஓட்டுனர்கள் மதுரை விமான நிலைய இயக்குனரை சந்தித்து தனியார் வாகனங்களுக்கு மற்றும் வாடகை வாகனங்களுக்கு என தனித்தனியாக புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் கூறுகையில்: தனியார் வாகனங்களுக்கு 30 ரூபாய் எனவும் அதுவே டி போர்டு எனப்படும் வாடகை வாகனங்களுக்கு 135 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று இயக்குனரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அதற்கு அவர் தங்களுக்கு இதில் அதிகாரம் இல்லை என்றும் இது தொடர்பாக டெல்லி அலுவலகத்தில் பேசி முடிவெடுப்பதாக தெரிவித்தார். அதுவரை நாங்கள் தனியார் வாகனங்கள் கொடுக்கும் 30 ரூபாய் கட்டணத்தை தான் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளோம். நாளை வாக்கு எண்ணிக்கை என்பதால் நான்கு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆயிரம் வாகன ஓட்டுனர்கள் மதுரை விமான நிலையத்தை முற்றுகையிடுவோம் தெரிவித்துள்ளோம் என்றார்.

Tags

Next Story