உலக வர்த்தக ஒப்பந்த நகலை எரிப்போம் - டைமன்ட் ராஜா வெள்ளையன்

உலக வர்த்தக ஒப்பந்த நகலை எரிப்போம் - டைமன்ட் ராஜா வெள்ளையன்

 டைமன் ராஜா வெள்ளையன்

உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து மத்திய அரசு வெளியே வரவில்லை என்றால், உலக வர்த்தக ஒப்பந்த நகலை கோவையில் நடைபெறும் மாநாட்டில் எரிப்போம் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் அவர் பேசுகையில், வருகின்ற மே மாதம் ஐந்தாம் தேதி கோவையில் 41 -வது வணிகர் தின விழா மாநாடு பேரவை மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் நடைபெற உள்ளது இந்த மாநாட்டின் வாயிலாக மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு சில தீர்மானங்கள் கொண்டு செல்ல உள்ளது..குறிப்பாக தற்போது நடைபெற்ற முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின்போது சில்லறை வணிகர்களிடமிருந்து தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பணங்களை எந்த ஒரு நிபந்தனைகள் இல்லாமல் அந்த பணங்களை சில்லறை வணிக வியாபாரிகளிடம் வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடை உரிமையாளர் லைசன்ஸ் புதுப்பிக்க வேண்டும் அல்லது புதியதாக வாங்க வேண்டும் என்றால் அந்த பில்டிங்கின் ஓனர் உடைய சொத்து மதிப்புகளை கொடுக்க வேண்டும் என நிபந்தனை வைக்கிறார்கள். எப்படி கடை உரிமையாளர்கள் அவர்களின் சொத்து மதிப்பை எப்படி வழங்குவார்கள் எனவே இதை அறவே அகற்ற வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கடந்த 15 ஆண்டுகளாக ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து வருகிறது ஆகையால் தான் கோவையில் நடைபெறும் மாநாட்டிற்கு ஆன்லைன் கார்ப்பரேட் ஆதிக்க எதிர்ப்பு மாநாடு என இந்த மாநாட்டிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் வர்த்தகத்தை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் . இந்த மத்திய அரசாங்கம் அம்பானிக்கும் அதானிக்கும் தான் கைக்கூலியாக உள்ளது. வியாபாரிகளுக்கு எந்த ஒரு அனுகூலமும் இல்லாமல் உள்ளது மத்திய அரசாங்கம். கூகுள் பே நிறுவனத்திற்கும் பேடிஎம் நிறுவனத்திற்கும் பல கோடி ரூபாய் தினமும் லாபம் போய் சேருகிறது இதற்கு தான் இந்த மத்திய அரசாங்கம் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் உலக வர்த்தகம் தான் காரணம் என சொல்கிறார்கள் முதலில் மத்திய அரசாங்கம் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து முதலில் வெளியே வர வேண்டும் . இல்லையென்றால் இந்த மாநாட்டில் உலக வர்த்தக நகலை நாங்கள் எரிப்போம் என பேசினார். மற்றும் கோவையில் நடைபெறும் மாநாட்டிற்கு மாநில ஒன்றிய நிர்வாகிகள் பலர் அணி திரண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story