தேர்தலை சுமூகமாக நடத்த ஒத்துழைக்கணும் !
தேர்தலை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என பாபநாசத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வலியுறுத்தினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து பொது தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக பாபநாசத்தில் காவல்துறை சார்பில் அனைத்து வங்கி அதிகாரிகள் ஹோட்டல் லாட்ஜ் கல்யாண மண்ட உரிமையாளர்கள் மற்றும் நகை கடை அடகு கடை உரிமையாளர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி , சப் இன்ஸ்பெக்டர்கள் ஈஸ்வரன், குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இக்கூட்டத்தில் பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோக் கலந்து கொண்டு பேசியதாவது . தேர்தலை சுமூகமாகவும் ஆரோக்கியமாக நடத்திட ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும். அதிக தொகையிலான பண பட்டுவாடா ஆகும் பட்சத்தில் வங்கி அதிகாரிகளும் அதேபோல் உணவகம் அல்லது விடுதியில் சந்தேகத்திற்கு இடமான வெளி நபர்கள் தங்குவதற்கு அனுமதிக்க கூடாது. கல்யாண மண்டபத்தில் அனுமதி இல்லா கட்சிக் கூட்டமோ அதையொட்டி எந்த நிகழ்வுகளும் அனுமதிக்க கூடாது.
அதனை மிறும்பட்சத்தில் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம் நகை அடகு கடை உரிமையாளர்கள் தினசரி நகை அடகு விவரங்களை வட்ட அலுவலகங்களுக்கு வழங்கிட வேண்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில் அது தொடர்பான புகாரினை அனைத்து தரப்பினரும் மாவட்ட ஆட்சியரகத்தில் நிறுவப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் அனைத்து வங்கி அதிகாரிகள் ஹோட்டல், லாட்ஜ் கல்யாண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகைக்கடை அடகு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.