தேசத்தை, கல்வியை பாதுகாப்போம் - இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தேசத்தை பாதுகாக்க வேண்டும், கல்வியை பாதுகாக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையை தடுத்து நிறுத்திட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசத்தை பாதுகாக்க வேண்டும். கல்வியை பாதுகாக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை தடுத்து நிறுத்திட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி கிளை சார்பாக தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவர் வே. அர்ஜுன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கு.சந்துரு, கிளை நிர்வாகிகள் பிரேம்குமார், ஆகாஷ், ஜெனிபர், சரோஜினி, தமிழரசன், ராஜதுரை, எடிசன், ஜோஸ்வா, வீரராஜ், திலீப், ரமணா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.
Next Story