பெண் குழந்தைகளை காப்போம் திட்ட கூட்டம்

பெண் குழந்தைகளை காப்போம் திட்ட கூட்டம்

தென்காசியில் பெண் குழந்தைகளை காப்போம் திட்ட கூட்டம் நடைபெற்றது.


தென்காசியில் பெண் குழந்தைகளை காப்போம் திட்ட கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வாயிலாக செயல்படுத்தப்படும் " பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தின் மாவட்ட அளவிலான கண்கானிப்பு குழு கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தினை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது என்பது பற்றி காவல்துறை, சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை அலுவலர் களுடன் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் தென்காசி மாவட்டத் தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் மற்றும் கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறியும் தடை சட்டத்தினை கடுமையாக செயல்படுத்திட மாவட்ட சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் காவல்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பெண் குழந்தைகளுக்கான விழப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம், இணை இயக்குநர்- சுகாதாரத் துறை, கூடுதல் துணை கண்கானிப்பாளர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story