இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற மோடியை  ஆதரிப்போம் - ஜி.கே. வாசன்

இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற மோடியை  ஆதரிப்போம் - ஜி.கே. வாசன்
ஜி.கே. வாசன் குமரியில் பிரச்சாரம்
இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற மோடியை  ஆதரிப்போம் என த.மா.க., தலைவர் ஜி. கே. வாசன் வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து த.மா.க., தலைவர் ஜி. கே. வாசன் நேற்று இரவு இரணியல் சந்திப்பில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை தேடி வந்துள்ளேன். அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் பல. கன்னியாகுமரியில் தேசிய நெடுஞ்சாலை 30 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டது. சுசீந்திரத்தில் 24 கோடி செலவில் 3 1/2 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம், பார்வதிபுரத்தில் 299 கோடி செலவில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன.

மிக முக்கியமாக தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் துவங்கி வைக்கப்பட்டது. 4000 கோடி செலவில் இரட்டை இரயில் பாதை அமைக்கப்பட்டு தற்போது முடிந்த நிலையில் உள்ளது. மூன்றாவது முறையாக பிரதமராகி மோடி இந்தியாவை வல்லரசாக மாற்றுவார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பிரதமருடைய பாரதிய மக்கள் மருந்தகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் 949 மருந்தகங்கள் இயங்குகின்றன.

பிரதமர் தலைமையில் நம்முடைய கூட்டணி தமிழகத்தில் 100% வெற்றி பெற வேண்டும். குமரி மாவட்டத்தில் மீனவர்கள் அதிக வாழும் பகுதி. மீனவர்களுக்கு துணை நிற்கும் கட்சி பாரதிய ஜனதா. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தாமாக தேர்தல் பொறுப்பாளர் ராஜ மகாலிங்கம், மாவட்டத் தலைவர் டி ஆர் செல்வம், முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி உட்பட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story