திருப்பத்தூரில் நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி: ஆட்சியர் பங்கேற்பு

திருப்பத்தூரில் நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி: ஆட்சியர் பங்கேற்பு

திருப்பத்தூரில் நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபயிற்சியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த நடை பயிற்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி பாச்சல் வழியாக அச்சமங்கலம் பகுதி வரை சென்று 8 கிலோமீட்டர் வரை நடைப்பயணம் மேற்கொண்டனர் இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் செந்தில், திருப்பத்தூர் மருத்துவ அலுவலர் சிவக்குமார், அலங்காயம் மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் சமூக ஆர்வலர்கள் என சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story