நெல்லையில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி

நெல்லையில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இன்று சென்னையில் நடப்போம் நலம் பெறுவோம் என்னும் திட்டத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து நடைபயணத்தில் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நெல்லையில் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் தாக்ரே சுபம் ஞான தேவ்ராவ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு என்.ஜி.ஓ காலனி உதயாநகரில் இருந்து நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.
குறிப்பிட்ட தூரம் நடந்து சென்று மீண்டும் உதயாநகர் வந்தடைந்தனர் இந்த நடைப்பயணத்தில் மாநகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் மருத்துவத்துறையினர், செவிலியர்கள், அரசுத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
