எம் எல் ஏ விஜயதாரணியை பதவி நீக்கம் செய்ய கடிதம்.

எம் எல் ஏ விஜயதாரணியை பதவி  நீக்கம் செய்ய கடிதம்.

விஜயதரணி , செல்வபெருந்தகை 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் எஸ். விஜயதரணி கட்சி தாவியதால் பதவி தகுதி நீக்கம் செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் எஸ். விஜயதரணி நேற்று புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அனுப்பி உள்ளார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் எஸ். விஜயதரணி உடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story