குமரியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - முதல்வர் திறப்பு

குமரியில்  நூலகம் மற்றும் அறிவுசார் மையம் -  முதல்வர் திறப்பு
கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றினார்
நாகர்கோவிலில் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோணம் மற்றும் கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட காஞ்சாம்புரம் பழைய சந்தை வளாகத்தில் கட்டுமான உத்திரவாத நிதியின் கீழ் தலா ரூ.2.50 கோடி என மொத்தம் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் குத்துவிளக்கேற்றி, புத்தகங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டதோடு, பள்ளி மாணவ மாணவியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், - இந்நூலகமானது ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படும். வெள்ளி கிழமை அன்று விடுமுறை. எனவே போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் அனைவரும் இந்நூலகத்தினை பயன்படுத்துவதோடு, அறிவுசார் மையத்தின் வாயிலாக தங்கள் திறமைகளை உயர்த்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என கூறினார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story