நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம்
மாநகராட்சி ஆணையர் கலந்துரையாடல்
திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம். தமிழக அரசால் திருப்பூர் மாநகராட்சி மூலம் UPSC, SSC, TNPSC, IBPS, RRB உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.2.61 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தில் போட்டித்தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவர்களுடன் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் கலந்துரையாடினார். இம்மையம் குறித்து அவர் கூறுகையில் இங்கு UPSC, SSC, TNPSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் கொண்டநூலகவசதிஅமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் உபயோகத்திற்காக Wi Fi வசதியுடன் கூடிய கணினி அறைகள், Digital வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் தினசரி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள். மாதாந்திர இதழ்கள் மாணவர்கள் படிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வாரந்தோறும் அரசு உயர் அதிகாரிகள் இம்மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் ஊக்க உரைகள் மாலை 5.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, திருப்பூரில் அரசு பணிக்காக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நஞ்சப்பா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை ஞாயிற்று கிழமை தவிர்த்து, தினசரி காலை 10.00 மணி முதல் மாலை 6.00 வரையும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.