காவல் நிலையத்தில் நூலகம் - ஆய்வாளருக்கு முஸ்லிம் லீக் பாராட்டு 

காவல் நிலையத்தில் நூலகம் - ஆய்வாளருக்கு முஸ்லிம் லீக் பாராட்டு 

ஆய்வாளருக்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள் 

தஞ்சை தெற்கு காவல் நிலைய வளாகத்தில் நூலகம் அமைத்துள்ள ஆய்வாளர் ரமேஷை முஸ்லிம் லீக் கட்சியினர் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.
தஞ்சை தெற்கு காவல் நிலைய வளாகத்தில், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், நூலகம் அமைத்து, பொது சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ள தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் சேவையை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயினுல் ஆபீதீன் பொன்னாடை அணிவித்து, "இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்" என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார். அப்போது மாவட்ட துணைச் செயலாளர்கள் எம்.இப்றாம்ஷா, ஏ.அக்பர்அலி, மாநகர சட்டமன்ற தொகுதி செயலாளர் எஸ்.அபுசாலிஹ், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் எம்.சுப்பராயன், ஜோசப், சையது ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story