எல்.ஐ.சி. பொன்விழா அறக்கட்டளை சார்பில் மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு வாகனம்
பள்ளிக்கு வாகனம்
எல்.ஐ.சி. பொன்விழா அறக்கட்டளை சார்பில் மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு வாகனம்.
எல்.ஐ.சி. நிறுவனம் தனது பொன்விழா அறக்கட்டளை மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள குழந்தைகள், ஆதரவற்ற முதியவர்களை பராமரிக்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும், உதவிகளையும் செய்து வருகிறது. அதன்படி, சேலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இ.எம்.எம்.ஒய்.எஸ். என்ற மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. (எல்.ஐ.சி. பொன்விழா அறக்கட்டளை சார்பில் அந்த பள்ளிக்கு எல்.ஐ.சி. நிர்வாகத்தினர் பள்ளி வாகனத்தை வழங்கினர். அந்த சிறப்பு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் எல்.ஐ.சி.யின் பொன்விழா அறக்கட்டளை சார்பில் 7 பேர் பயணம் செய்யும் பள்ளி வாகனம் வழங்கும் விழா சேலம் கோட்ட எல்.ஐ.சி. அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், எல்.ஐ.சி. முதுநிலை கோட்ட மேலாளர் அனந்தகுமார், வணிக மேலாளர் இளங்கோவன், விற்பனை மேலாளர் சவுண்டப்பன் உள்பட கோட்ட அளவில் உள்ள மேலாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள், பாலிசிதாரர்கள் மற்றும் இ.எம்.எம்.ஒய்.எஸ். சிறப்பு பள்ளியின் தாளாளர் ஹேமாஜாய் அசிர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
Next Story