கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து

உரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் தபேந்திரன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்த உர விற்பனையாளர்கள் உரத்தை சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பும்போது உரிய பட்டியல்கள் மற்றும் ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும். உர விற்பனையாளர்கள் அனுமதி பெற்ற இடம் மற்றும் கிடங்களில் மட்டும் உரத்தை இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். அனுமதி பெறாத இடத்தில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடுதல் விலைக்கு உரம்விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும்.

மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தங்களுக்கு அனுமதி வழங்கிய நிறுவனத்திடமிருந்து மட்டும் உரம் கொள்முதல் செய்ய வேண்டும். எந்தநிலையிலும் அனுமதி பெறாத நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யக்கூடாது. உரங்கள் விவசாயி அல்லாத பிற உபயோகத்திற்கு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சில்லரை விற்பனையாளர்கள் உரத்தின் விலை மற்றும் இருப்பு விவர பலகையினை விவசாயிகளின் பார்வைக்கு தெளிவாக தெரியும்படி வைக்க வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர் தபேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story