உரிமம் பெற்ற துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்

சேலம் மாவட்ட ஆட்சியர்

சேலம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அதன் உரிமைதாரர்கள், தங்களது எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் உடனே ஒப்படைத்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒருவார காலத்திற்கு பிறகு, போலீஸ் நிலையங்களில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் துப்பாக்கிகளை பொது இடங்களுக்கு எடுத்துச்செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, சேலம் மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்ற உரிமைதாரர்கள் தங்களது துப்பாக்கிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பு செய்து, உரிய ஒப்புதல் ரசீதை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story