சிறார் வதை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
நீதிமன்றம்
அரூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தர்மபுரி மாவட் டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் போஸ் (எ) சந்திர போஸ் இவர், அதே பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமியுடன் நெருக்கமாக இருந்தபோது, செல் போனில் படம் எடுத்து வைத்துக்கொண்டு, சமூக வலைத்தளத்தில் போட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். கடந்த 6.4.2015ம் தேதி பள்ளி பள்ளிக்குச் சென்ற சிறுமியை சந்திர போஸ் மற்றும் அவரது நண்பர்கள் முபராக், சந்தோஷ் ஆகியோர் மிரட்டி மறைவான் இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். இது குறித்த புகாரின் பேரில், அரூர் அனைத்து மகளிர் நிலையத்தினர் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து சந்திரபோஸ், முபராக், சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இறுதி விசாரணை நடந்தது. நீதிபதி சயத்பர்கத் துல்லா விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட சந்திரபோஸ், முபராக், சந்தோஷ் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்ட னையும், தலா 35 ஆயிரம் அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்தார்.
Next Story