பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
பாத்திமாராஜ்
முன்விரோதத்தில் பெண்ணை தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தென்காசி சேர்ந்தமரம் அந்தோணி வியாகம்மாளுக்கும் பாத்திமாராஜ் என்பவருக்கும் தெருவில் குடிதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் 21-1-2020 அன்று அந்தோணி வியாகம்மாள் தண்ணீர் பிடித்த போது பாத்திமாராஜ் அவரை அடித்து கொலை செய்தார். இவ்வழக்கை விசாரித்த நெல்லை மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் பாத்திமாராஜ்க்கு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதம் விதித்து நேற்று (பிப்.29) தீர்ப்பளித்தார்.
Next Story